» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடமை, கண்ணியம், சுய ஒழுக்கம் முக்கியம்: த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!

புதன் 30, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும், சுய ஒழுக்கமும் 100 சதவீதம் சமரசமற்றதாக இருக்க வேண்டும் என த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள். நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.

அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்புகிறேன். இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியவில்லை. நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும், சுய ஒழுக்கமும் 100 சதவீதம் சமரசமற்றதாக இருக்க வேண்டும். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும். இனி அடுத்தடுத்து நம்ம மக்களை சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கிறது. நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா பாலோ செய்வீங்கன்னு நம்புகிறேன். செய்வீங்க, செய்றீங்க, ஓகே? இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

டேய் சிவாஜி கணேசன் அவர்களுக்குமே 2, 2025 - 07:14:44 PM | Posted IP 162.1*****

லூசுத்தனமாக பேச வேண்டாம், அவர் இப்போது தான் புதிதாக கட்சிக்கு வந்தவர், ஆட்சிக்கு வந்தவுடன் தான் எல்லாம் தெரியும். உட்காருங்க.

சிவாஜி கணேசன்Apr 30, 2025 - 03:39:38 PM | Posted IP 172.7*****

திரைப்பட நடிகர்கள் பல பேர் அரசியலுக்கு வந்தார்கள், ஆனால் மாபெரும் மனிதர் MGR மட்டும் மாபெரும் வெற்றி பெற்றார். அது அவருடைய மகத்தான பங்களிப்பு,நடிக்கும் போதே படத்தில் உதவி செய்வது போல நிஜத்திலும் அவர் ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்வார். அனால் இந்த ஜோசப் விஜய் சினிமாவில் வீடு கட்டிக்கொடுப்பர் . 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்ப்பார் . ஆனால் நிஜத்தில் யாருக்கும் உதவ மாட்டார். இவரெல்லாம் சீக்கிரம் காணாமல் போய்விடுவார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory