» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு!

புதன் 30, ஏப்ரல் 2025 9:09:31 PM (IST)



காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்றார். 

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியான ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று முதல் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படுவார் என, அவருக்கு சந்​நி​யாஸ்ரம தீட்சை வழங்கிய சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது ஆசி உரையில் குறிப்பிட்டார். ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திராவிட்​டுக்​கு, சந்​நி​யாஸ்ரம தீட்சை வழங்கும் வைபவம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் இன்று காலை நடைபெற்றது.

சந்​நி​யாஸ்ரம தீட்சை பெருவதற்கு முன்பாக ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திரா​விட்​, திருக்குளத்தில் இறங்கி தான் அணிந்திருந்த கடுக்கண், மோதிரம், பூணூல், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, சந்நியாசத்தை ஏற்றார். அதன்பின், வேத மந்திரங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், அவருக்கு தீட்சை வழங்கி பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை வழங்கினார்.

தொடர்ந்து இளைய மடாதிபதியின் தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்களைச் செய்தார். தொடர்ந்து, பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், அவருக்கு ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமத்தை சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory