» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் தேவாலயத்திற்குள் நுழைந்து ஊழியருக்கு வெட்டு: வாலிபர் கைது

வியாழன் 1, மே 2025 8:22:26 AM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் நுழைந்து ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில், பணியாளராக வேலை செய்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் அந்தோணிராஜ் (54). இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பைபிள் குறித்து பாடம் கற்றுக்கொடுத்து கொண்டிருந்தாராம்.

அப்போது, ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தடை செய்யப்பட்ட புகையிலையை பயன்படுத்தினாராம். இதை சாமுவேல் அந்தோணிராஜ் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது நண்பர்களுடன் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு, சாமுவேல் அந்தோணி ராஜை தாக்கி, அவரது செல்போனை உடைத்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக  கூறப்படுகிறது.

காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முகமது மீரான் உசேன் (20) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற இளஞ்சிறார்களைத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory