» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உட்பட 3பேர் கைது

வியாழன் 1, மே 2025 8:32:04 AM (IST)



கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மீகா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அவர்கள் கயத்தாறு அருகே பணிக்கர்குளத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி மகன் இசக்கிமுத்து (21), திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் நடுத் தெருவை சேர்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22), தூத்துக்குடி மீளவிட்டானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் அவர்களிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory