» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிபிஎஸ்இ நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: அன்பில் மகேஷ்
வெள்ளி 2, மே 2025 11:42:43 AM (IST)
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் தோல்வி (FAIL) என்ற நடைமுறைக்கு எதிராக பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும். சாக்லேட் சாப்பிடுற வயசு பிள்ளைக்கு எப்படி இதை புரிய வைப்பீங்க?. கடனை வாங்கி சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்?. இதன் காரணமாக தான் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. என்.சி.இ.ஆர்.டி. பாடங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. சிபிஎஸ்இ-யின் இந்த நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தேசிய கல்விக் கொள்ளை உள்ளே நுழைந்தால் மாநில கல்வி அமைப்பே இல்லாமல் போய்விடும் நிலை உருவாகும். தமிழக அரசின் நடவடிக்கையால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். திமுக அரசு அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. மாநில கல்விக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். வரலாற்றில் தேச விரோதிகளை, தியாகிகளாக மாற்றுகிறார்கள். தரமான கல்வி வழங்க புது புது திட்டங்களை உருவாக்கி வருகிறோம். என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
Tamilanமே 2, 2025 - 01:58:32 PM | Posted IP 162.1*****
kalviyil arasiyal seyyatheenga anbil magesh avagale....
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)

இதுமே 2, 2025 - 07:15:40 PM | Posted IP 104.2*****