» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர் சேர்க்கை அதிகரிக்க உழைக்க வேண்டும் : தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

வெள்ளி 2, மே 2025 12:27:49 PM (IST)



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் என குமரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் தொடக்க கல்வி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்- தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, மார்ச் ஒன்றாம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சில பள்ளிகள் மாணவர்களை ஆர்வமுடன் பள்ளிகளில் சேர்த்து வருகின்றன. சில பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சற்று பின் தங்கிய நிலையில் நிலையில் காணப்படுகிறது. 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும், வரும் கல்வி ஆண்டில் துவக்க முதலே மாணவர் அடைவு திறனில் அதிக அக்கறை செலுத்தி அரசு பள்ளிகளின் வலிமையை அதிகப்படுத்துவதற்காக அனைத்து தலைமையாசிரியர்களும் செயல்பட வேண்டும். கடந்த ஆண்டுகளில் சிறப்பாக பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரித்த தலைமையாசிரியர்கள், தாங்கள் எவ்வாறு பள்ளியில் மாணவ சேர்க்கையை அதிகரித்தார்கள் என்பதை குறித்து எடுத்துரைத்தார்கள். 

மாணவர் சேர்க்கை மேற்கொள்ளாத பள்ளிகள் சிறப்பு உத்திகள் மூலம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் சென்றடையும் வகையில், மிகவும் பொறுப்பான பணியில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள், மற்றவர்களுக்கு எடுத்துரைத்து, அனைத்து தரப்பட்ட குழந்தைகளும் பயன்பெறும் வகையில் தங்கள் பங்களிப்பை அளித்திட வேண்டும்.
 
அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி தொடர, 7.5சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர ஊக்கப்படுத்திட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் இன்று போதிய வழிகாட்டுதல் இல்லாமையால், தங்கள் நிலைமைக்கு மிஞ்சி தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பின் கல்வியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அல்லல் உறுகின்றனர். இந்நிலை முற்றிலும் களைப்யப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் கற்று அதன் மூலம் கிடைக்கப்பெறும் உயர்கல்வி வாய்ப்புகளை கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். 

எனவே இதனை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிந்து விட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இது போன்ற வாய்ப்புகளை இன்னும் அதிகமான மாணவர்கள் பெற்று பயன்பெற வேண்டும். எனவே அதிகமான மாணவர்களை மாணவர்களை சேர்க்க வேண்டும். பள்ளியில் குறைவான மாணவர் சேர்க்கை மேற்கொண்ட பள்ளிகள் தொடர்ந்து பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரிக்க உழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது என்றார்.

நடைபெற்ற கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 381 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், மாவட்ட தொடக்ககல்வி அலுவலர், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Samaniyanமே 2, 2025 - 01:14:03 PM | Posted IP 172.7*****

plz closed pvt schools ,

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory