» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு காவல்துறை தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை

வெள்ளி 2, மே 2025 5:46:16 PM (IST)

தமிழ்நாடு காவல்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை வேதனை தெரிவித்துள்ளது. 

சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ரூ. 13 லட்சம் மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த இருவர் மீது வேலூரை சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனோகர் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கின் விசாரணையின் போது இரண்டு மாதங்களில் இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உறுதியளித்தபடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றும் படி உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும், உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்படுவதாக கூறினாலும் கூட கள நிலவரங்கள் வேறாக இருப்பதால் ஒவ்வொறு முறையும் நீதிமன்றத்தின் கதவை தட்டவேண்டியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை வேதனை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory