» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஐடி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நடிகர் ஆர்யா விளக்கம்!
புதன் 18, ஜூன் 2025 10:45:35 AM (IST)

சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் ஹோட்டல் தனக்கு சொந்தமானது இல்லை என்று நடிகர் ஆர்யா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமானதென கூறப்படும் சீ ஷெல் (sea shell) உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதைபோல அவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் தனக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். "ஐடி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ரெய்டு நடக்கும் ஓட்டல் வேறு ஒருவருடையது" என ஆர்யா கூறி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர்யாவிடமிருந்து குன்ஹி மூசா என்பவர் இந்த உணவகங்களை வாங்கியிருப்பதாக தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: ஒட்டன்சத்திரம் அருகே சோகம்!
புதன் 18, ஜூன் 2025 11:07:52 AM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஜூலை 15ம் தேதி தொடக்கம் : 10 ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டம்!
புதன் 18, ஜூன் 2025 10:16:48 AM (IST)
