» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு பள்ளியில் மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்!
புதன் 3, செப்டம்பர் 2025 11:34:27 AM (IST)

அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளை கை, கால் அமுக்கி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.
அரூர் அருகேயுள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை ஆசிரியை கலைவாணிக்கு மாணவ, மாணவிகள் கை, கால்களை அழுத்தி விட்டு மசாஜ் செய்யும் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியுற்ற பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து, பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனிடையே, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்யபிரியா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, "பல்வேறு நாட்களில் மாணவ, மாணவிகளை கை, கால்களை அழுத்திவிட சொல்வதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறக்கூடாது எனவும் மாணவர்களை தலைமை ஆசிரியர் மிரட்டுகிறார். மாணவர்களிடம் அத்துமீறி நடந்த தலைமை ஆசிரியை மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "விசாரணையைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வேறு ஆசிரியர் உடனடியாக பணியில் இணைவார்” என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:18:59 PM (IST)

வரலாறு காணாத ஜிஎஸ்டி வரி குறைப்பு: மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:05:54 PM (IST)
