» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!

வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

மீலாத் நபி, மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஓணம் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் அனைவரும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

சகோதரத்துவம் மற்றும் மனித நேயம் நிறைந்த பண்டிகையான ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைவராலும் சிறப்புடன் கொண்டாடப்படும் பண்டிகை. நல்லாட்சி செய்தால் பல நூற்றாண்டுகள் தாண்டியும் ஆட்சி செய்தவர்களை சரித்திரம் போற்றும் என்பதற்கு ஒரு உதாரணமும் இந்த ஓணம் பண்டிகை.

இந்த திருநாளில் மகிழ்ச்சி நிறைந்த குடும்பச் சந்திப்புகள், விருந்தோம்பலின் இனிமை, கலைகளின் உற்சாகம் ஆகியவை நம் குடும்பங்களில் ஆனந்தம் பொங்கச் செய்கின்றன. நன்மை, செழிப்பு, ஆரோக்கியம் நிரம்பிய வாழ்க்கையை ஓணம் பண்டிகை எல்லோருக்கும் அருளட்டும். இந்த இனிய நாளில் சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் வலுவடைந்து, நல்லிணக்கம் பொங்கட்டும்.

மீலாத் நபி வாழ்த்துக்கள்:

உலகெங்கும் உள்ள முஸ்லிம் சொந்தங்களுக்கு எனது மிலாத் நபி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

சிறப்பாகக் கொண்டாடப்படும் மீலாத் நபி தினம், இரக்கமும் கருணையும், மனித நேயமும், நல்லிணக்கமும் வலியுறுத்திய நபி முஹம்மது அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் புண்ணியமான நாளில் அனைவருக்கும் அவரது அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

நபியின் வாழ்க்கைச் செய்தி சமத்துவம், அன்பு, சகோதரத்துவம் மற்றும் அமைதி ஆகியவற்றின் சின்னமாக திகழ்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மனித நேயம் வேரூன்றி வளர வேண்டும் என்ற அவருடைய போதனைகள், காலம் கடந்தும் இன்றும் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக உள்ளன.

இன்றைய சமுதாயத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மிக அவசியமாகிறது. இந்த புனித நாளில், நம் அனைவரும் நபி அவர்களின் வாழ்வு பாதையை முன்மாதிரியாகக் கொண்டு, மனித குல நலனுக்காக செயல்படுவோம் என்ற உறுதியை எடுப்போம். இந்த மீலாத் நபி தினம், உங்கள் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் ஆனந்தம் வழங்கட்டும். நம் நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory