» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு: தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு

புதன் 3, செப்டம்பர் 2025 3:52:34 PM (IST)

பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கப் போவதாக தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. 

மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு கடந்த 27-ந்தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம் இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி 50 சதவீதமாக உயர்ந்தது.

50 சதவீத வரிவிதிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ரசாயனங்கள், மின்சார எந்திரங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. எனவே, தமிழக ஓட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க பொருட்கள், அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்க பொருட்களுக்கு பதிலாக இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டை சேர்ந்த சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

முட்டாள்Sep 4, 2025 - 07:16:44 AM | Posted IP 172.7*****

அதுக்கள் எல்லாம் அமெரிக்கா பெயரில் இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளால் துட்டுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைகளே. இங்கு கார்ப்பரேட் துட்டு மக்கள் அதிகம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory