» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடியரசுத் தலைவர் முர்மு தமிழகம் வருகை : ஆளுநர், துணை முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு

புதன் 3, செப்டம்பர் 2025 3:41:23 PM (IST)



தமிழகத்தில் 2 நாள் பயணமாக வருகை தந்துள்ள குடியரசு தலைவரை ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் 2 நாள் பயணமாக வருகை தந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஸ், கீதா ஜீவன் ஆகியோர் பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் சென்னை ராஜ்பவன் வளாகத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில் அரளி என்று சொல்லக்கூடிய புளுமேரியா மரம் (Plumeria Tree) நடுவை செய்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory