» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் செப்.10-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 7:30:52 PM (IST)
தமிழகத்தில் நாளை முதல் செப்.10-ம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (செப்.7) முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்.11 முதல் 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை (செப்.8) தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும்.
(நாளை மறுநாள்) செப்.9-ம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும், செப்.10-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.8) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என .
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ மழை, விழுப்புரம் மாவட்டம் வல்லம், சென்னை மணலி புதுநகரில் தலா 9 செ.மீ மழை, புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி, விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் வத்தலை அணைக்கட்டு ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டையன் ஆதரவாளர் சத்தியபாமாவின் கட்சிப் பதவியும் பறிப்பு: இபிஎஸ் நடவடிக்கை
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 7:26:21 PM (IST)

அதிமுகவை பலவீனமாக்கி வருகிறது பாஜக : தூத்துக்குடியில் தமிமும் அன்சாரி பேட்டி
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 11:59:24 AM (IST)

பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவி கைது
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:38:19 AM (IST)

திருச்செந்தூரில் கடல் 80 அடி தூரம் உள்வாங்கியது
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:09:58 AM (IST)

செங்கோட்டையனை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
சனி 6, செப்டம்பர் 2025 5:56:51 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பிரேக்கிங் தரிசன முறை: வாபஸ் பெற இந்து முன்னணி வலியுறுத்தல்!
சனி 6, செப்டம்பர் 2025 5:26:52 PM (IST)
