» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மலேசிய சாரணர் இயக்க நிர்வாகிகள் கலாச்சார பயணமாக திருச்செந்தூர் வருகை!

ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:00:26 PM (IST)



மலேசியாவில் உள்ள சாரணர் இயக்க நிர்வாகிகள் கலாச்சார பயணமாக திருச்செந்தூர் வருகை தந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். 

மலேசியா- இந்தியா கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக மலேசிய நாட்டில் உள்ள சாரணர் இயக்க நிர்வாகிகள் மற்றும் உயர்நிலை அலுவலர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள தமிழக கலாச்சார அமைப்புகளையும் பார்வையிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்த மலேசியா சாரண அலுவலர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
 
திருச்செந்தூருக்கு வருகை புரிந்த  மலேசிய சாரணியர் இயக்க நிர்வாகிகளை திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலன், துணை செயலாளர் ஜெர்சோம் ஜெபராஜ், பொறுப்பாசிரியர்கள் காந்திமதி, தமிழ்மாறன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், கடற்கரைப் பகுதி மற்றும் கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறு புணரமைப்பு பணிகளை பார்வையிட்டனர். பின்னர், கோவில் யானை தெய்வானையிடம் ஆசிபெற்றனர்.

இதனைத் தொடர்ந்து மலேசியா சாரண அலுவலர்கள் மலேசிய நாட்டின் சாரணியர் இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழா ஸ்கார்ப்பினை திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க  பொறுப்பாளர்களுக்கு அணிவித்தனர்.  இக் கலாச்சார பயணத்தில், மலேசிய நாட்டின் சாரணியர் இயக்க துணை தலைவர் டத்தோ ஜெயதேவி தலைமையில், உயர்நிலை அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, பரிமளா, விமலா, இந்திரா தேவி, ஞான அஸ்வினி, லட்சுமி பிரபா, சரண்யா மற்றும் சிவகாமி ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். திருச்செந்தூர் கோவிலின் கலைநயம், இப்பகுதி மக்களின் கலாச்சாரத்தை கண்டு மகிழ்ந்த பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory