» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:28:51 PM (IST)

சினிமாவில் நடிப்பவர் கூட்டத்தை நடத்தலாம். ஆனால், எந்த வகையிலும் திமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில். தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள் அது மட்டுமல்லாமல் நாளை அண்ணா பிறந்த நாளை ஒட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் உறுதிமொழி ஏற்கக்கூடிய நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறினார்.
அப்போது தவெக விஜய் திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் "விஜய் புரிந்து பேசுகிறாரா இல்லையா என தெரியவில்லை. விஜய் கேட்கின்றார் என்று சொன்னால் விஜய் இதுவரை இந்த தமிழகத்தின் மக்களுக்கு தமிழ்நாட்டுடைய இளைஞர்களுக்கு தமிழ்நாட்டின் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களுக்கு எவர்களுக்காவது எந்த உதவியாவது செய்திருக்கிறாரா?
விஜய் நடிகராக இருக்கும் போது 200 முதல் 300 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகின்ற நடிகர் எந்த செயலாவது மக்களுக்காக செய்திருக்கிறாரா இல்லை. எதுவும் செய்யாமல் கேள்வி கேட்பது எளிது. பாஜக அரசு எத்தனை இடைஞ்சல்கள் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார். மக்களை நம்பி தான் நாங்களும் எங்கள் இயக்கமும் இருக்கிறது மக்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை எங்களுடைய கழகத் தலைவர் தமிழக முதலமைச்சர் அத்தனை நிறைவேற்றி தருவார்கள் என்றார்.
யார் கட்சியை ஆரம்பித்தாலும் திமுகவை தான் பற்றி பேசுவார்கள் ஏனென்றால் திமுக தான் மக்கள் மன்றத்தில் இருக்கக்கூடிய இயக்கம் மக்களை நேசிக்கக்கூடிய இயக்கம். அதனால் தான் சாதாரணமொருவர் கட்சி ஆரம்பித்தால் திமுகவை வீழ்த்தப் போகிறேன் என்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனும் தொடவும் முடியாது அசைக்கவும் முடியாது என ஆவேசத்துடன் தெரிவித்தார்.
சினிமாவில் நடிப்பவர் கூட்டத்தை நடத்தலாம் எந்த வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க முடியாது என்றார். தூத்துக்குடிக்கு வரும் விஜய்க்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் விஜய்க்கு மக்கள் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேஷம் போடும் நடிகர்கள் பின்னால் செல்லாதீர்கள் : விஜய் மீது முன்னாள் அமைச்சர் தாக்கு!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:24:27 PM (IST)

விஜய் கட்சியில் கண்ணியம், கட்டுப்பாடு இல்லை : அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:08:04 PM (IST)

மலேசிய சாரணர் இயக்க நிர்வாகிகள் கலாச்சார பயணமாக திருச்செந்தூர் வருகை!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:00:26 PM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)

kannanSep 14, 2025 - 09:57:01 PM | Posted IP 162.1*****