» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேஷம் போடும் நடிகர்கள் பின்னால் செல்லாதீர்கள் : விஜய் மீது முன்னாள் அமைச்சர் தாக்கு!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:24:27 PM (IST)

திரைப்படத்தில் வேஷம் போட்டு நடித்த நடிகரை பாா்க்க செல்லுங்கள் மனநிலையை மாற்றிவிடாதீர்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.
தூத்துக்குடி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்தநாளை முன்னிட்டு 40வது வார்டு அதிமுக சார்பில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான எட்வின் பாண்டியன் ஏற்பாட்டில் நலதிட்ட உதவிகளை அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லபாண்டியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் "மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி செய்தாா். மக்களுக்கான ஆட்சி என்றால் அது அதிமுக தான் அந்த ஆட்சியில் தொடா்ந்த பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதை யெல்லாம் மக்கள் உணா்ந்து கொண்டு மக்களுக்கு பணி செய்பவா்களை தோ்ந்தெடுக்க வேண்டும். இன்னும் ஒவ்வொரு தொண்டன் மற்றும் பெண்கள் மனதில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. மேலும் மாநகராட்சியில் சொத்து வரி குடிநீர் வரி மற்றும் குப்பைக்கு கூட வரி போட்டு பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளனா். திரைப்படத்தில் வேஷம் போட்டு நடித்த நடிகா்களை பார்க்க செல்லுங்கள். ஆனால் மனநிலையை மாற்றிக்கொண்டு அவா் பின்னால் சென்றுவிடாதீர்கள். நீங்கள் நினைக்கிற மாதிாி அவா் இப்படி பட்ட நபா் இல்லை என்று விஜய் மீது மறைமுக தாக்குதலை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன் வைத்து பேசினாா்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், மாவட்ட முன்னாள் மீனவர் அணி செயலாளர் அகஸ்டின், இணைச்செயலாளர் ஜோசப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வட்ட செயலாளர் அந்தோணி, சகாயராஜ், முன்னாள் கவுன்சிலா் சகாயராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரோமால்டு, சிறுபான்மை பிரிவு அசன், அபுதாகிர், பிரபாகா், முன்னாள் மேலூா் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஜேடி அம்மா, பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி குரூஸ்புரம் அண்டோ, அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் சங்கர், சகாயம், டெரன்ஸ், பெலிக்ஸ், ஜோசப், ஜேசுராஜ், வழக்கறிஞர் ராஜாராம், தெர்மல் முருகேசன், வாா்டு நிர்வாகிகள் உதயகுமார், ஜான்சன், வர்கீஸ், வளன், ஆண்ட்ரூஸ், அரவிந்த், ஜெனிஸ், வசந்த், திவாஸ், ஜெப்பி, ஸ்டெபின், அஜித், கேஸ்ட்ரோ, கிராஸ்வின், அஜய், ரியாஸ், ஜான்சன், ஜாஸ்பர், சோல்ஜர், செல்ட்டன், ஜாக்சன், இன்பென்ட், பிரான்சிஸ், சரான், ஜெகதீஷ், ஸ்டார்வின், சரான், டேனியல், பிரைட்டன், சுரேஷ், பிரபாகரன், அசோகன், செல்வராஜ், தாமஸ், சசிகுமார், பெவின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:28:51 PM (IST)

விஜய் கட்சியில் கண்ணியம், கட்டுப்பாடு இல்லை : அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:08:04 PM (IST)

மலேசிய சாரணர் இயக்க நிர்வாகிகள் கலாச்சார பயணமாக திருச்செந்தூர் வருகை!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:00:26 PM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)
