» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு

திங்கள் 15, செப்டம்பர் 2025 8:07:13 AM (IST)



குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி.  ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 3.10.2025 அன்று வரை நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்திற்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார். 

கோவில் வளாகம், வாகனம் நிறுத்துமிடம், கோவிலுக்கு செல்லும் வழித்தடங்கள், சூரசம்காரம் நடைபெறும் இடம், தசரா குழுவினரின் வழித்தடம், பக்தர்களின் தரிசன பாதை உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகளில் அது குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிட்டு அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார், குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர் உள்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory