» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

வெள்ளி 10, அக்டோபர் 2025 11:31:20 AM (IST)


தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கால்வாய், சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இதில் கம்பிகள் பயன்படுத்தாமல் சிமெண்ட் கலவை மூலம் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையில் லாரி போன்ற வாகனங்கள் வரும் போது கால்வாய் சேதம் அடைய வாய்ப்புள்ளது. 

ஏற்கனவே பெருமாள்புரம் பகுதியில் இதுபோன்று கம்பியில்லாமல் கட்டப்பட்ட கால்வாய் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனை 2ஆண்டுகளுக்கு மேலாகியும் மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற பணிகளால் மக்களின் வரிப்பணம் கோடிக் கணக்கில் வீணடிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி மேயர்  மற்றும் ஆணையர் இப்பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory