» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூரிலிருந்து விஜய் வெளியேறியது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு விளக்கம்

வெள்ளி 10, அக்டோபர் 2025 4:16:26 PM (IST)

கரூர் பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசல் ஏற்பட்டு மக்கள் பலியான போது, காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாலேயே, தவெக தலைவர் விஜய் அங்கிருந்து வெளியேறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் செப். 27ஆம் தேதி நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து தவெக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்துவது மட்டும் போதாது, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று பகல் 12 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில், தவெக தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தவெக தரப்பில், சம்பவம் நடந்தபோது, விஜய் அங்கிருந்தால், மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் நேரிடலாம் என்பதால், காவல்துறையினர்தான், விஜய் அங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர். காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாலேயே, சம்பவ இடத்திலிருந்து தவெக தலைவர் விஜய் அங்கிருந்து வெளியேறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களையும் தவெகவினர் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால், நியாயமான விசாரணை வேண்டும் என தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு வைக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த ஒரு தரப்பையும் சாராத விசாரணை வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. மாநில அரசின் விசாரணைக் குழு மீது நம்பிக்கை இல்லை, அது, தமிழ்நாடு காவல்துறை அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மை வெளியே வர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றமே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரித்திக்கின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரனா வழக்கறிஞர் வாதாடியபோது தெரிவித்ததாவது: கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படப்போகிறது என மதியம் 3.15 மணிக்கே திமுக உறுப்பினர் ஒருவர் வலைதளப்பதிவு.

பதிவு போட்டவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர். இடையூறாக இருக்கும் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் ஜனவரியில் அனுமதி மறுத்த நிலையில் செப்டம்பர் மாதம் அனுமதி. திடீரென காவல்துறை கூட்டத்திற்குள் தடியடி நடத்தியது. எதற்கு தடியடி நடக்கிறது எனத் தெரியாமல் பலர் ஓடினர். விஜய் பிரசாரத்தின்போது செருப்பு வீசப்பட்டது. அப்போது கூட கூடத்தில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை.

600 போலீசார் பாதுகாப்பில் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் எங்கே இருந்தார்கள்?. * கூட்ட நெரிசலில் ஒரு போலீசாருக்கு கூட காயம் ஏற்படவில்லை. ஏன்? இந்த விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் உளள்து. இவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory