» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!

வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்த அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் பல ஆண்டுகளாக நடந்த 8 கிலோ தங்க நகைகள் கொள்ளை 1992 ஆம் ஆண்டு தெரியவந்தது. இதுதொடர்பாக 2019 இல் நாகர்கோவில் நீதிமன்றம் 14 பேருக்கு 6 ஆண்டுகள், 10 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. வழக்கில் தற்போது உயிருடன் உள்ள 18 பேர் மேல் முறையீடு செய்ததை அடுத்து நேற்று (அக்.9) பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory