» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்: வைகோ அறிக்கை!

வியாழன் 6, நவம்பர் 2025 12:06:44 PM (IST)



"கரூர் கொடுந்துயருக்கு முழுக்காரணமான விஜய் பொறுப்பற்று திசை திருப்புகிறார். அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

த.வெ.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதை சுட்டிக்காட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய். கரூர் கொடுந்துயருக்கு முழுக்காரணமான விஜய் பொறுப்பற்று திசை திருப்புகிறார். நடந்த சம்பவத்திற்கு துளியளவும் வருத்தப்படாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் உள்ளார் விஜய்.

காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும். தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளிநகையாட முனைகிறார் விஜய். முதலமைச்சர் மீது வெறுப்பையும், கசப்பையும் கொட்டி தீர்த்திருக்கிறார் விஜய். விஜயின் நிலைமை அனுதாபத்திற்கும் பரிதாபத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory