» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!
வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றி வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்முறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பா,ஜ,க, மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன், பெண்களை இழிவாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் கட்சியில் பதவி வழங்கி உள்ள திமுக பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
இதில் மாவட்ட தலைவர் கோபகுமார், மாவட்ட பொருளாளர், டாக்டர் முத்துராமன் ,மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி
வியாழன் 6, நவம்பர் 2025 12:17:30 PM (IST)

விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்: வைகோ அறிக்கை!
வியாழன் 6, நவம்பர் 2025 12:06:44 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)

பீகாரில் முதல்கட்டத் தோ்தல் தொடங்கியது : 121 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!
வியாழன் 6, நவம்பர் 2025 10:34:53 AM (IST)




