» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் கோனோகார்பஸ் மரங்கள் வெட்டி அகற்றம்

சனி 15, மார்ச் 2025 11:43:29 AM (IST)



தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 12 கோனோகார்பஸ் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. 

தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஏராளமானோர் வாக்கிங் செல்கிறார்கள். மேலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடந்து வருகிறது. இந்த மைதானத்தில் சுற்றுச்சூழல், மனித உடல்நலத்துக்கு கேடு உருவாக்கக்கூடிய கோனோகார்பஸ் (conocorpus) வகை மரங்கள் அதிக அளவு வளர்ந்து இருந்தது. இந்த மரங்களை அகற்றக்கோரி மைதானத்திற்குள் வாக்கிங் வருபவர்களும் விளையாட்டு வீரர்களும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர் 

இதைத் தொடர்ந்து ஆல் கேன் டிரஸ்ட் தலைவர் மோகன்தாஸ் சாமுவேல் விளையாட்டு அலுவலர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து மரங்களையும் அகற்ற வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் இன்று காலை ஆல் கேன்டிரஸ்ட் தலைவர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் விளையாட்டு அலுவலர் முன்னிலையில் 12 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதில் உறுப்பினர்கள் கேசவன், வேல்முருகன், கென்னடி, டேவிட் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

geethaMar 15, 2025 - 05:34:33 PM | Posted IP 162.1*****

vela menakkata -----------erumaikku sairachalam pp yavathu op yavathu poda

சந்திரன்Mar 15, 2025 - 12:56:17 PM | Posted IP 172.7*****

சீமை கருவேலம் மரத்தை வெட்டினால் உருப்படியாக இருக்கும்

மக்களின் ஒருவன்Mar 15, 2025 - 12:28:55 PM | Posted IP 162.1*****

பறவைகள், குருவிகளை காப்பாற்ற அங்கு பழம் தரும் மரங்களை நிறைய நடவுங்கள். நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory