» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 12:02:33 PM (IST)

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சேதம் அடைந்துள்ள சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி டூவிபுரம் மெயின் ரோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்தினர் சாலையை தோண்டி பைப் லைனை சரி செய்தனர். இதன் பின்னர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், அந்த பள்ளம் பெரிதாகி உள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோக்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதன் அருகே தாலூகா அலுவலகம், தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

அன்புOct 17, 2025 - 12:25:23 PM | Posted IP 162.1*****