» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாலையோர முள் மரங்களால் போக்குவரத்துக்கு இடையூறு: உடனடியாக அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 10:58:28 AM (IST)

நாசரேத் அருகே புன்னையடி - பூச்சிக்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ள முள்மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, கச்சனாவிளை கிராமப்புற பகுதியில் புன்னையடி- பூச்சிகாடு செல்லும் சாலை குதிரை மொழி காப்பு காட்டில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையின் இரு பக்கமும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக கொக்கி முள் செடிகள் அமைந்துள்ளன.
இந்த கொக்கி முள் செடிகள் சாலையின் இரு பக்கமும் அடர்த்தியாக இச் சாலையை சூழ்ந்திருப்பதால், இவ்வழியாக பேரூந்துகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு முள் மரத்தினால் காயங்கள் ஏற்படுகிறது. மேலும் தூண்டில் அமைப்பு கொண்ட இந்த கொக்கி முள் செடி கடுமையான காயங்களை ஏற்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், பாரம்பரிய வேம்பு பனைமரம் போன்ற அனைத்து மரங்களையும் அழித்துவிடக் கூடியது.
தற்போது வடகிழக்கு மழை பெய்து வருவதால் மழை தண்ணீர் பட்டு ரோட்டில் சாயும் நிலையில் உள்ளது.ஆகையால் மேற்படி சாலையின் இரு பக்கமும் உள்ள முள் மரங்களை அகற்றி மேற்படிச்சாலையில் பயணிக்கும் பொது மக்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

MansoorOct 18, 2025 - 01:37:23 PM | Posted IP 162.1*****