» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக வட்டாச்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு வாக்காளர்களால் நிரப்பப்பட்ட முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாக சங்தேகங்களுக்கு வட்டாச்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமானது 01-01-2026ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) இரண்டாவது நிலையான கணக்கெடுப்பு பணியானது முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் வாக்காளர்களின் வீடுகள் தோறும் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
"திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும், 1490 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை (Enumeration Forms) ஒவ்வொரு வாக்காளருக்கும் இரட்டைப் பிரதிகளில் வழங்கி உள்ளனர்.
மாவட்டத்தில் 13,42,113 வாக்காளர்களுக்கு (சுமார் 94.63%) முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. BLO Mobile மூலம் நிரப்பபட்ட படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்கள் இல்லங்களுக்கு சென்று பெற்று ஆப்பில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து சங்தேகங்களுக்கு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து உதவி மையங்களை வாக்காளர்கள் அனுகலாம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உதவி மையம் எண் 0462-2501181, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உதவி மையம் எண் 0462-2333169, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உதவி மையம் எண் 0463-4250348, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி உதவி மையம் எண் 0462-2500086, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உதவி மையம் எண் 86673 69165, இராதாபுரம் சட்டமன்ற தொகுதி உதவி மையம் எண்94860 52878 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் தகவல் பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவர் கைது
வியாழன் 8, ஜனவரி 2026 7:59:54 AM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

