» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)
ராதாபுரம் அருகே வீடுபுகுந்து தம்பதியை மிரட்டி 4 பவுன் நகை-பணத்தை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராதாபுரம் அருகே பல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சாமி (70). இவருடைய மனைவி சொர்ணம் (65). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். எனவே சாமி-சொர்ணம் தம்பதியர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநமபர்கள் நேற்று அதிகாலையில் சாமியின் வீட்டுக்குள் நைசாக புகுந்தனர்.
அங்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாமி-சொர்ணம் தம்பதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, சொர்ணம் அணிந்திருந்த 4 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து தப்பி சென்றனர். கொள்ளையர்கள் சென்றதும் தம்பதியர் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் இருளில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவர் கைது
வியாழன் 8, ஜனவரி 2026 7:59:54 AM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

