» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் 46.42 சதவீதம் படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம்: ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 25, நவம்பர் 2025 11:02:21 AM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு வாக்காளர்களால் நிரப்பப்பட்ட முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் BLO App-இல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமானது 01-01-2026ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்கிட வாக்காளர்களுக்கு உதவி செய்யும் விதமாக இன்றையதினம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் வட்டம் வாகைகுளம் ஊராட்சி மற்றும் உக்கிரன்கோட்டை ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதுவரை நேற்று 24.11.2025 மாலை 4.00 மணி வரை 6,58,344 கணக்கீட்டு படிவங்கள் 46.42 சதவீதம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் போன்ற இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மற்றும் தன்னாவலர்கள் மூலம் BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory