» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

ஆரல்வாய்மொழி பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத்துறையினர் பொய்கைக் காட்டுப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விலங்குகளை வேட்டையாட முயன்ற ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பிரகாஷ் (24), சுரேஷ் (40) ஆகிய இருவரும் விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்த வனத்துறையினர், அவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முனைவர் அ. அன்பு அவர்களின் உத்தரவின்படி, பிடிபட்ட இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக இருவருக்கும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரையும் வனத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் சிறையில் அடைத்தனர். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)

இராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு : அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:14:50 PM (IST)

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)

