» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 10:54:26 AM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15.03.2026 அன்று வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளைச் செம்மையாக மேற்கொள்ளும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தலைமை தாங்கி இப்பயிற்சியினை வழங்கினார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு வரும் 28.03.2026 அன்று அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்டமாக நடைபெற்ற இன்றைய பயிற்சியில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 153 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் தேர்தல் நாளன்று மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணிகள். வாக்குச்சாவடி அலுவலர்கள் கையாள வேண்டிய தேர்தல் தொடர்பான படிவங்கள் மற்றும் ஆவணங்களைச் சரிபார்த்தல். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்), மி. பிரபு (தூத்துக்குடி), ரா. கௌதம் (திருச்செந்தூர்), செந்தில்வேல்முருகன் (ஸ்ரீவைகுண்டம்), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), திரு. ஹிமான்ஷு மங்கள், (கோவில்பட்டி) மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி: மென்பொருள் பொறியாளர், நண்பர் கைது!
வியாழன் 26, மார்ச் 2026 8:41:00 AM (IST)

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)

இராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு : அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:14:50 PM (IST)

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

