» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கனிமொழி எம்.பி. வாகனம் தடுத்து நிறுத்தம்; 1 கி.மீ நடந்து சென்று அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை!

சனி 11, ஜூலை 2026 12:55:07 PM (IST)

Kanimozhi43i43.jpg

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டலங்குளத்தில் நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. வாகனம் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காட்டலங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காகக் கனிமொழி கருணாநிதி எம்.பி. வருகை தந்தார். அப்போது பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவரது வாகனத்தைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

வாகனத்தை உள்ளே அனுமதிக்கக் கோரிக் கனிமொழி எம்.பி. மற்றும் திமுக கழக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வாகனத்தை உள்ளே செல்லக் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், கனிமொழி எம்.பி. தனது வாகனத்தில் இருந்து உடனடியாக இறங்கி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். 

KattalankulamKanimozhi.jpg

காட்டலங்குளத்தில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் விளாத்திகுளம் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டி கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு முன்னாள் யூனியன் சேர்மன் மாணிக்கராஜா, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்


மக்கள் கருத்து

மா. பரமசிவம்Jul 13, 2026 - 11:44:59 AM | Posted IP 172.7*****

மக்கள் பிரதிநிதிகள் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் ஒரு தலைவருக்கும் மரியாதை செய்ய வரும் பொழுது தடுப்பது மிகவும் தவறு எல்லோருக்கும் பொதுவானவர் விடுதலை போராட்ட வீரர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தலைவருக்கும் ஒரு எம் மரியாதை வழங்க வேண்டும் அதுதான் சரி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory