» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)
திருமணத்தின் போது வரதட்சணையாகக் கொடுத்த நகைகளைத் திரும்பக் கேட்டுத் தகராறு செய்த தாயார் மீது புதுப்பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஜூன் 15 அன்று மீனவ கிராமத்தைச் சேர்ந்த புதுப்பெண்ணுக்கும் இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது தாயார் தன் மகளுக்கு 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக வழங்கியுள்ளார்.
திருமணக் கடன்களை அடைப்பதற்காக மகளுக்குக் கொடுத்த நகைகளைத் தாயார் உறவினர்களுடன் சென்று திரும்பக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். நகைகளைத் தர மறுத்த புதுப்பெண், தன் தாய் மீது குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் இருதரப்பையும் அழைத்து விசாரித்த போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. புதுப்பெண் தன் நகைகள் அனைத்தையும் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறி, தாயாரிடம் உள்ள தன் ஆதார் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழ்களை மீட்டுத் தருமாறு கோரினார். வரதட்சணை விவகாரம் என்பதால் நீதிமன்றத்தை நாடித் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி, இருதரப்பிடமும் எழுதி வாங்கிவிட்டுக் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)

பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம்: முதல்வர் விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
சனி 11, ஜூலை 2026 5:15:59 PM (IST)


