» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!
வியாழன் 30, ஜூலை 2026 10:12:24 AM (IST)
தூத்துக்குடியில் மீண்டும் பசுமைத் தாமிர உருக்காலை அமைப்பதற்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைத்து மூடியது.தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை, தமிழக அரசுடன் இணைந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் சென்னை உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி வென்றது.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் பசுமைத் தாமிர உருக்காலை என்ற பெயரில் மீண்டும் ஆலை தொடங்க அனுமதி கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் அரி ராகவன் மூலமாக இடைமனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் இணைந்துள்ளதாகக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் மற்றும் க. வசந்தி (பண்டாரம்பட்டி) ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்: "பசுமைத் தாமிரம் என்ற பெயரில் மீண்டும் தூத்துக்குடியில் கால்பதிக்கத் துடிக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடைசி வரை சட்டப்போராட்டம் நடத்தி, அப்பகுதியின் சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதுகாப்போம்." என்று தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மக்கள்Jul 30, 2026 - 12:36:05 PM | Posted IP 172.7*****
திமுக தான் எல்லாத்துக்கு காரணம்.
MAKKALJul 30, 2026 - 10:46:46 AM | Posted IP 104.2*****
BAN BAN BAN STERLITE
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)



க.கணேசன்.Jul 30, 2026 - 08:40:48 PM | Posted IP 104.2*****