» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி - தாம்பரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு: தென்னக ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 30, ஜூலை 2026 9:31:23 PM (IST)
தென் மாவட்ட மக்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சேவை நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள்:
தூத்துக்குடி - தாம்பரம் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது)
திருநெல்வேலி - தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரல் - போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அதிக சுபமுகூர்த்த நாட்கள், சுதந்திர தின தொடர் விடுமுறை மற்றும் தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு கோயில் திருவிழாக்கள் காரணமாக ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முன்னதாகவே திட்டமிட்டு, முன்பதிவு தொடங்கும் போது விரைவாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)



johnJul 31, 2026 - 12:13:12 AM | Posted IP 162.1*****