» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்!

வியாழன் 7, டிசம்பர் 2023 5:48:00 PM (IST)



ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நாகர்கோவில் திருசிலுவை கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர். 

நாகர்கோவில் திருசிலுவை கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு வரலாற்று துறை மாணவிகள் கடந்த 21 நாள்களாக நெல்லை அருங்காட்சியகத்தில் நடந்த உள் விளக்கப் பயிற்சியில் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியில் அருங்காட்சியகம் குறித்தும், அதன் வகைப்பாடுகள், செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு நாளையொட்டி அவர்கள் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்கள், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் ஆகியவற்றை பார்வையிட்டனர். 

இதற்காக நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி தலைமையில் பயணம் செய்தனர். கிருஷ்ணாபுரத்தில் உள்ள சிற்பங்களை மாணவிகள் பார்வையிட்டனர். அவர்கள் குறவன் இளவரசியை தூக்கி செல்லும் சிற்பம், குறத்தில் இளவரசனை தூக்கிச்செல்லும் சிலை, கர்ணம், அர்ச்சுணன், ரதி, மன்மதன், பீமன், தர்மன், புருஷா மிருகம் உள்பட பல்வேறு சிறப்பங்கள் பார்வையிட்டனர். 

இந்த கலை சிற்பங்கள் குறித்தும் அதன் நுணுக்கங்கள் குறித்தும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார்.அதன் பின் அவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அவர்களுக்கு பி சைட்டில் வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தார். 

அங்கு வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி, முழு உடல் மனிதனின் எலும்பு கூடு, புதிதாக அமையவிருக்கும் அருங்காட்சியம் மாதிரி, உள்பட அங்கு வைத்திருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். இந்தியாவிலேயே முதன்முதலில் அமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை அவர் பார்வையிட்டனர்.

மேலும், அலெக்சாண்டர் இரியா 100 வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்த இடம் 2023ல் ஆய்வு செய்த இடங்கள் மற்றும் தங்கம் மற்றும், இரும்பு வெண்கல பொருள்கள் எடுக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு உள்ள கறுப்பு சிவப்பு பானையோடுகளில் வகைகளை பார்வையிட்டனர். 

மேலும் நெற்உமி, மனித பற்கள், எலும்பு கூடுகளையும், முதுமக்கள் தாழிகளையும் பார்வையிட்டனர். ஆய்வு செய்வது குறித்தும், ஆதிச்சநல்லூர் சைட் குறித்தும் ஆய்வு மாணவி திவ்யா விளக்கமளித்தார். ஆய்வு ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory