» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசை குறை சொல்லாமல் களத்தில் இறங்கி வேலை செய்வது நம் கடமை : கமல்ஹாசன் கருத்து
வெள்ளி 8, டிசம்பர் 2023 10:17:58 AM (IST)
அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வடசென்னை, பொன்னேரி, திருவெற்றியூர் பகுதிகளை சேர்ந்த 5000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.
அதன்பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். கடந்த காலத்தை விட தற்போது அதிக அளவு பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இப்பொழுது அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை. நாங்கள் எப்போதும் அப்படி தான் செய்து கொண்டு இருக்கிறோம். கொரோனா காலத்தில் கூட இந்த வீட்டை நோயாளிகளின் சிகிச்சைக்கு வழங்க முடிவு செய்தேன். ஆனால் அரசு அதை ஏற்கவில்லை.
இதுபோன்ற இடைஞ்சல்கள் எங்களுக்கு புதிதல்ல 40 வருடங்களாக அனுபவித்து வருகிறோம். அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல, அதை பிறகு செய்யலாம், நாம் இப்போது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். வல்லுனர்களுடன் ஆலோசித்து இதுபோன்ற பேரிடர்களுக்கான தீர்வுகளை ஆராய வேண்டும். நாம் மக்களுக்கு உதவி செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எங்களுக்கு மட்டும் அல்ல அந்த பொறுப்பு உங்களுக்கும் தான் உள்ளது.
தற்போது வடசென்னை, பொன்னேரி, திருவெற்றியூர் பகுதிகளை சேர்ந்த 5000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளோம்' என்று கூறினார். மேலும் செய்தியாளர் ஒருவர் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கமல்ஹாசன் தேர்தல் குறித்து பிறகு பேசலாம், முதலில் தண்ணீர் வடியட்டும் என்று பதிலளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 10, மே 2025 12:30:31 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

நீர் மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் கூடாது: போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
சனி 10, மே 2025 11:14:45 AM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண்ணில் இயக்க கோரிக்கை
சனி 10, மே 2025 10:44:08 AM (IST)

அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் : தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி!
சனி 10, மே 2025 10:15:03 AM (IST)

ஜெய் ஜெய்Dec 8, 2023 - 03:49:18 PM | Posted IP 172.7*****