» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: காரணம் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:09:55 PM (IST)
பீகாரில் சிறப்பு திருத்த முறையால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, காரணங்களுடன் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீகாரில் சிறப்புத் திருத்த முறைக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் ஆதார் அட்டையுடன் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம், நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் விண்ணப்பிக்கும் முறை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. முன்னதாக, இறந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு முன்பு, ஏன் அதை பொது வெளியில் வெளியிடவில்லை என்று தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்த நிலையில்தான், 65 லட்சம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது. மேலும், பீகாரில் மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? யார்? என்னென்ன காரணங்களுக்காக நீக்கப்பட்டனர் என்றும் கேட்டிருக்கிறது. 4 நாள்களில் இணையதளத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டு, பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த முறை மேற்கொள்வதை எதிர்த்த மனு மீதான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை நீக்கிய சந்திரசேகர் ராவ்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:02:50 PM (IST)

ஆசிரியர்களுக்கு டெட் தகுதி தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:53:18 AM (IST)

செப்டம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:30:06 PM (IST)

வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:24:32 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: பாலம் இடிந்து சேதம் - வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:58:04 PM (IST)

நாங்கள் புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம்: அமெரிக்காவுக்கு பியூஷ் கோயல் பதிலடி!
சனி 30, ஆகஸ்ட் 2025 4:19:31 PM (IST)
