» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

வியாழன் 13, நவம்பர் 2025 10:16:06 AM (IST)



பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்ப கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை இலங்கை வாரியம் நிராகரித்துள்ளது.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அடுத்ததாக 2, 3-ஆவது ஒருநாள் போட்டிகள் முறையே நவ.13, நவ.15 ஆம் தேதிகளில் விளையாடுகிறது. அனைத்துப் போட்டிகளும் ராவல்பிண்டி திடலில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ராவல்பிண்டி அருகேவுள்ள இஸ்லாமாபாத்தில் நவ. 11 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணமாக 8 வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளை ரத்து செய்துவிட்டு, இலங்கை வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போட்டிகளை ரத்து செய்துவிட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருப்பது வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அரசு முழுப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி செய்திருப்பதாகவும், முடிவை மீறி வீரர்கள் நாடு திரும்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory