» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்!

புதன் 30, ஏப்ரல் 2025 4:16:48 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் தொடர்புடைய 2பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.  

நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கார்மேகனார் தெருவை சேர்ந்த ரத்தினபாண்டி மகன் மாணிக்கம்(எ) மகேஷ் (வயது 30) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி கவனத்திற்கு வந்தது.
ரூமில் ருசிகரம்

இதேபோல் நெல்லை மாவட்டம், முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு சங்கன்திரடு, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் பார்வதி பாஸ்கரன் (வயது 22) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக முக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து சிவந்திபட்டி, முக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்சொன்ன நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின்பேரில் மகேஷ், பார்வதி பாஸ்கரன் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory