» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்

வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு மே 5 முதல் 24ம் தேதி வரை குரலிசை, பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக - மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஆறு முதல் பதினாறு வயதுக்கு உட்பட்ட பள்ளிக் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கலைப்பயிற்சிகள் வழங்குதல், அவர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணர்தல், கலைக்கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 

திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் 6 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகின்றது. மேலும், விவரங்களுக்கு அலைபேசி எண்.8248057152 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு, திருநெல்வேலி - 07 என்ற முகவரியில் வருகிற 05-05-2025 முதல் 24-05-2025 வரை காலை 10.00 மணிமுதல் 12.00 மணி வரை குரலிசை, பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

பயிற்சி முடிந்தவுடன் நிறைவு நாள் அன்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே இவ்வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory