» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!

புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)

ராயகிரி பகுதியில் பைக் மீது தனியார் பஸ் மோதியதில் பைக்கில் ஒருவர் சம்பவ இடத்திலேய இறந்தார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார். 

தென்காசி மாவட்டம்,  சிவகிரி ராஜபாளையம் சாலையில் காருண்யா மருத்துவமனை அருகில் முன்னால் சென்ற தனியார் பஸ்ஸை பைக்கில் சென்ற நபர் முந்திச் செல்ல முயன்ற போது தனியார் பஸ் பைக் மீது மோதியது. இதில் தளவாய்புரம் அருகே உள்ள கிழக்கு முகவூர் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் நாடார் என்பவரது மகன் கண்ணன் (23) ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு வாழ வந்தாள்புரம் பகுதியைச் சார்ந்த ராஜாமணி மகன் கணேஷ் குமார் (29) இருவரும் ஒரு பைக்கில் வந்துள்ளனர். 

அப்போது தனியார் பஸ் மோதியதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கணேஷ்குமார் பலத்த காயங்களுடன் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த கணேஷ் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory