» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)
நெல்லை அருகே கோவிலில் சாமியாடிய பக்தர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற மாடசாமி (55). இவர் அந்த பகுதியில் உள்ள சப்பாணி மாடசாமி கோவிலில் சாமியாடி வந்தார். நேற்று முன்தினம் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற பூஜையின்போது மாடசாமி சாமியாடினார். பின்னர் அவர் கோவிலில் இருந்து மயான வேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.
மயான வேட்டை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோவிலுக்கு திரும்பிய மாடசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர், பக்தர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாடசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விரைந்து சென்று, மாடசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடசாமி ரத்த அழுத்த பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

நெல்லையில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்!
புதன் 30, ஏப்ரல் 2025 4:16:48 PM (IST)
