» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!

சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

செங்கோட்டை அருகே கேரள எல்லையில் ரயிலில் கொண்டு சென்ற ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லையில் உள்ள புனலூர் ெரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

ரயில் நிலையத்தை வந்தடைந்த உடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்ேபாது அதில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சோ்ந்த அப்துல் அஜீஸ் (35), விருதுநகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (40) என்பது தெரியவந்தது.

மேலும் பணம் தொடர்பாக போலீசார் ஆவணங்களை கேட்ட போது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.34 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புனலூரில் ரயில் கொண்டு சென்ற ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory