» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கவின் கொலை தொடர்பாக பரவும் வீடியோ: நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை!

திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:46:44 PM (IST)

சமூக வலைதளங்களில் பரவும் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் கொலை தொடர்பான வீடியோ குறித்து நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 27.07.25 ம் தேதி திருநெல்வேலி மாநகரம்,பாளையங்கோட்டை காவல் சரகம், கே.டி.சி. நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (வயது 27) என்பவர் கொலை செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் ஒரு சில நபர்களால் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

மேற்படி காணொளியில் உள்ள சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றது ஆகும். மேலும் அந்த காணொளிக்கும் திருநெல்வேலியில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இதுபோன்று சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிரும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருநெல்வேலி மாநகர காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory