» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு மருத்துவமனையில் மதி சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 11:31:35 AM (IST)

திருநெல்வேலி அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் ‘மதி சிறுதானிய உணவகம்” நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழு/ ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் சிறு தானிய உணவகம் உருவாக்குவதால், மகளிர் சுய உதவிக்குழுஉறுப்பினர்களுக்கு நிலையான வாழ்வாதார வழிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், சமூகத்தின் அடுத்த தலைமுறையான குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஆரோக்கியமான மற்றும் ஒரு தனித்துவமான உணவு பழக்கவழக்கத்ததை வளர்ப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு சமையல், தொழில்முனைவோர் செயல்பாடுகள் மற்றும் சுகாதார மேம்பாடு ஆகிய பயிற்சிகள் வழங்குவதன் மூலம் உணவகங்களில் சிறுதானியம் சார்ந்த சத்தான உணவுகளை வழங்கி ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு வழிவகை செய்வதுடன், நிலையான வருமானத்தையும் பெருக்க செய்கிறது.

எனவே, காந்திநகர், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி / ரெட்டியார்பட்டி, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதி சிறுதானிய உணவகம் நடத்திட கல்லூரியிலிருந்து 5 முதல் 8 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஆர்வமும் மற்றும் தகுதியுடைய ஊரகப்பகுதியில் செயல்படும் செயல்திறன் யு மற்றும் டீ தரமதிப்பீடு பெற்றுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்கும் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் உணவு உற்பத்தி / விற்பனையில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் 6 முதல் 8 உறுப்பினர்களை கொண்டு உணவகம் நடத்திட விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.

எனவே ஆர்வமுள்ள ஊரகப்பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை 08.08.2025-க்குள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டிடம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory