» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு : ஆட்சியர் தகவல்
சனி 16, ஆகஸ்ட் 2025 12:54:02 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் ஐடிஐயில் மாணவர் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஜடிஜ) நடப்பு ஆண்டில் மாணவர்கள் நேரடியாக சேர கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான பேட்டை, இராதாபுரம் மற்றும் புதிதாக துவங்கப்பட்டுள்ள திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் நீங்கலாக, காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் நேரடிச்சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்காணும் ஐடிஐ-களில் சேர விரும்புபவர்கள் உரிய அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து இந்நேரடிச்சேர்க்கையில் சேரலாம். மேலும் இப்பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185/-ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195/-ம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி/ கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / இரயில் பயண கட்டண சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப)/ சீருடை 2 செட் (தையற்கூலியுடன்) / மூடு காலணி 1 செட் / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ இவற்றுடன் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பெறும் ஆண்/ பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன்/ புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் கூடுதலாக ரூ.1000/- உதவித்தொகை பெற்று வழங்கப்படும்.
இவ்வாய்ப்பினை 8ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய +1/ +2/ பட்டய / பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற / தோல்வியடைந்த / இடைநின்ற மாணவ / மாணவியர் தொழிற்கல்வியினை பயின்று நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பினை தனியார்/ மத்திய / மாநில அரசு தொழில் நிறுவனங்களில் வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பினை பெற்று பயன் பெறலாம்.
மேலும் இவ்வருடத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலைய நேரடி சேர்க்கை தற்காலிகமாக இடையன்குடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு ஐடிஐ அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 0462-2342005, 9499055791 என்ற எண்ணிற்கும், இராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9965759121, 8610763264 என்ற எண்ணிற்கும், திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 8838473272, 9443462242 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)
