» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:30:56 AM (IST)

சங்கரன்கோவிலில் நகராட்சி தேர்தலில் தலைவர் பதவியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. 22 வாக்குகள் பெற்று கவுசல்யா வெற்றி பெற்றார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 13 வார்டுகள், தி.மு.க. 9, ம.தி.மு.க. 2 மற்றும் காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டு மற்றும் சுயேட்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரி, அ.தி.மு.க.வை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், இருவரும் தலா 15 வாக்குகள் பெற்றதால் சமநிலை ஏற்பட்டது.
எனவே குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணன் என்ற ராஜூ 16 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 24 கவுன்சிலர்கள் சேர்ந்து நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தமுள்ள 30 உறுப்பினர்களில் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் நகராட்சி தலைவர் பதவியை உமா மகேஸ்வரி இழந்ததாக அறிவிக்கப்பட்டு, நகராட்சி தலைவர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால், குரல் வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உமா மகேஸ்வரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து கோர்ட்டு அளித்த உத்தரவின்படி, கடந்த ஜூலை 18-ந் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதனால் உமா மகேஸ்வரி தலைவர் பதவியை இழந்தார். எனவே காலியாக உள்ள தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் கவுசல்யா வெங்கடேஷ், அ.தி.மு.க. சார்பில் 26-வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் ஆகியோர் போட்டியிட்டனர்.
முன்னாள் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் தி.மு.க. உறுப்பினர் ஒருவரும் கூட்டத்துக்கு வரவில்லை. மீதமுள்ள 28 பேர் வாக்களித்தனர். நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் பகல் 11.15 மணிக்கு மேல் தேர்தல் தொடங்கியது. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது.
இதில் தி.மு.க.வைச் சேர்ந்த கவுசல்யா வெங்கடேஷ் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டும் பெற்றார். வெற்றி பெற்ற கவுசல்யா வெங்கடேஷ் உடனே பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)
