» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மேலப்பாளையத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் நிறுத்தம் : பயணிகள் வரவேற்பு

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 10:55:28 AM (IST)

மேலப்பாளையத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் விரைவு ரயில் மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ராபர்ட் புரூஸ் எம்.பி. மேலப்பாளையத்தில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன்பலனாக நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ரயில் நேற்று காலை 9 மணிக்கு மேலப்பாளையம் ரயில் நிலையத்துக்கு வந்து நின்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். ரயில் ஓட்டுனர்களுக்கு மேலப்பாளையம் ரயில் பயணிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் முத்துவேல், முகம்மது கக்கூர், காதர் மைதீன், நசுருல்லா வக்கீல் மதார் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory