» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நிசாங்கா அபார சதம்: சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை; ஆஸிக்கு சிக்கல்!!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:50:24 AM (IST)

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப்-பி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கண்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர் முடிவில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்செல் மார்ஷ் 54 ரன்கள், டிராவிஸ் ஹெட்: 56 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் ஹேமந்தா 3 விக்கெட்டுகளையும், சமீரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தீக்ஷனா, வெல்லலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
182 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இலங்கைக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. குஷல் பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இணைந்த பதும் நிசாங்கா - குஷல் மெண்டிஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. மெண்டிஸ் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய பதும் நிசாங்கா, 52 பந்துகளில் 100 ரன்கள் (10 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசி மிரட்டினார். இது இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் சதமாகும். இறுதியில் இலங்கை அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. பவன் ரத்னநாயகே நிசாங்காவுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலியாவின் நிலை: இந்தத் தோல்வியால் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. ஜிம்பாப்வே அணி விளையாடவுள்ள அடுத்த இரண்டு போட்டிகளின் முடிவைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிஎஸ்கே தொடர் தோல்வி: தலைமை மாறுமா? ருதுராஜ் - பிளெமிங் மீது ரசிகர்கள் அருப்தி!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:59:36 PM (IST)

சாம்சனை இப்போதே எடை போடாதீர்கள்! - சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஆதரவு
சனி 4, ஏப்ரல் 2026 11:13:13 AM (IST)

அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்: ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை ஏன்?
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:23:08 PM (IST)

வருண் சக்கரவர்த்தியின் மிஸ்டரி முடிவுக்கு வந்ததா? விமர்சனங்களுக்கு கே.கே.ஆர் பயிற்சியாளர் பதிலடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:00:44 PM (IST)

தோல்வியால் விரக்தி: மைதானத்திலேயே ரிஷப் பண்டை கடிந்து கொண்ட சஞ்சீவ் கோயங்கா!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:08:34 AM (IST)

தோனி இல்லாத சிஎஸ்கே தடுமாற்றம்: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:41:28 AM (IST)

