» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:56:46 PM (IST)

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி மற்றும் 5 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.04.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.2.80 இலட்சம் மதிப்பில் ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவியினை மாவட்ட ஆட்சியர் சுகுமார், வழங்கினார்.
இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெறிநாய் கடித்ததால் 47 ஆடுகள் உயிரிழந்தது. உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்கள் 05 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் நிவாரண தொகை ரூ.2.82 இலட்சத்திற்கான காசோலைகளையும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு நல வாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் சுகுமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், தனித்துணை ஆட்சியர் (நதிநீர் இணைப்பு திட்டம்) சண்முகசுந்தர், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா , உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)
